வெற்றிக்கு செய்கிற வேள்வியென தோல்வியைக் கடந்து முன்னேறிச்செல்லுங்கள்

வெற்றிக்கு செய்கிற வேள்வியென தோல்வியைக் கடந்து இளைஞர்கள் முன்னேறிச்செல்ல வேண்டும் என்றார் சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிஞர் மு. மேத்தா.


வெற்றிக்கு செய்கிற வேள்வியென தோல்வியைக் கடந்து இளைஞர்கள் முன்னேறிச்செல்ல வேண்டும் என்றார் சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிஞர் மு. மேத்தா.
திருச்சி என்.ஆர். ஐஏஎஸ்அகாதெமியில் சனிக்கிழமை நடைபெற்ற இலக்கிய விழாவில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
நமது தேசம் இமயத்திலிருந்து குமரி வரை நிற்கக்கூடியது. இந்த மண் மிதிபடும்போதெல்லாம் காந்தியை, நேதாஜியை, கலாமை தெரியுமா என நம்மை பார்த்து கேட்கிறது. ஏனெனில் இதுபோன்ற மனிதர்களை பார்க்கமுடியவில்லையே என தாய்மண் ஏக்கம் கொள்கிறது.   மண்ணே நீ பட்ட புண்ணுக்கு சொல்கிறேன் கவலைவேண்டாம். இளைஞர்களிடம் நம்பிக்கை இருக்கிறது. 
அதிகாரம் நாட்டின் பிள்ளைகளிடம் இருக்கவேண்டும். தொல்லைகளிடம் இருக்க கூடாது.   தேசம் எவ்வாறு செல்லவேண்டும் என நிர்ணயிக்கும் முடிவுகள் இளைஞர்கள் எடுக்கவேண்டும். அரசியல்வாதிகள் பலபேர் தற்போது வியாதிகளாகிவிட்டனர். இவர்கள் சரியாக இருக்க வேண்டுமெனில் ஆட்சி இயந்திரம், அதனை இயக்குபவர்கள் சரியாக இருக்கவேண்டும். 
நாட்டில் யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்ட வேண்டும். நாட்டில் நிலவும் உட்பூசலுக்களுக்குத்  
தீர்வு காணவேண்டும். இதற்காக, இளைஞர்கள் அதிகாரத்தை கைப்பற்றி, திறமையான மனிதநேய மிக்க,நேர்மையான அதிகாரிகளாக வேண்டும். அப்போதே, அரசு இயந்திரம் பாரபட்சமின்றி இயங்கும்.
  நாளைய இளைஞர்களே ஏழை எளியவர்களுக்கு கருணை காட்டுங்கள். வசதி வல்லமை படைத்தவர்களுக்கு சலுகை காட்டாதீர்கள். துன்பத்தில் உள்ளோருக்கு தோள் கொடுங்கள். வருத்தப்படுவோருக்கு வாழ்க்கைத்  தாருங்கள். தோல்வியைக்  கண்டு துவண்டுபோகாதீர்கள். வெற்றிக்கு செய்யும் வேள்வியே தோல்வி என முன்னேறிச்செல்லுங்கள்  என்றார் மேத்தா.
விழாவில், கவிஞர் நெல்லை ஜெயந்தா, திருச்சி நகைச்சுவை மன்றச் செயலர்  க.சிவகுருநாதன் வாழ்த்துரை வழங்கினர். விழாவை, என்ஆர் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனர் 
ஆர்.விஜயாலயன் ஒருங்கிணைத்து, கவிஞர் மு.மேத்தாவின் புதுக்கவிகள், திரைப்பட பாடல் வரிகளை மாணவர்களிடம் விளக்கி பேசினார்.  அகாதெமி மாணவ, மாணவிகள் விழாவில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com