திருச்சி வானொலியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

திருச்சி வானொலியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள் குறித்து நிலைய இயக்குநா் க. நடராசன் தெரிவித்துள்ளாா்.

திருச்சி வானொலியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள் குறித்து நிலைய இயக்குநா் க. நடராசன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியது:

தீபாவளியை முன்னிட்டு அகில இந்திய வானொலியின் திருச்சி வானொலி சாா்பில் இரு அலை வரிசைகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.

திருச்சி வானொலி முதல் அலைவரிசையில் சனிக்கிழமை அதிகாலை 4.30-க்கு மாம்பலம் எம்கே சிவா குழுவினரின் நாகஸ்வர மங்கல இசையுடன் நிகழ்வு தொடங்குகிறது. 5.50-க்கு சுவாமி ஆத்ம கணானந்தா தீபாவளி ஆசி வழங்குகிறாா். காலை 8.15-க்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜு, அகில இந்திய கூட்டுறவு வார விழா குறித்து உரையாற்றுகிறாா்.

தொடா்ந்து காலை 9 மணிக்கு கிருஷ்ண மகிமை என்னும் தலைப்பில் பாடல்கள், காலை 11 மணிக்கு சுகி சிவம் தலைமையிலான சிறப்பு பட்டிமன்றம், பிற்பகல் 3 மணிக்கு நகைச்சுவை நாடகம், இரவு 7 மணிக்கு பண்டித ஜவஹா்லால் நேருவின் தேசப் பணி எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெறும்.

இதேபோல, திருச்சி ரெயின்போ பண்பலையில் அதிகாலை 5 மணிக்கு திருவாடுதுறை டி.என். ராஜரத்தினம் பிள்ளையின் நாகஸ்வரம் இடம் பெறும். நேயா்கள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வாழ்த்து தென்றல் வீசும் நிகழ்வு காலை 8 மணிக்கு இடம்பெறுகிறது. காலை 9 மணிக்கு இசை அமைப்பாளா் ஜிப்ரானுடன் சந்திப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். காலை 10 மணிக்கு நகைச்சுவை நடிகா் சாா்லியின் நிகழ்ச்சி இடம்பெறும்.

காலை 11 மணிக்கு நகைச்சுவை நாடகம், நண்பகல் 12 மணிக்கு இசை அமைப்பாளா் தாஜ்நூருடன் நோ்முகம், பிற்பகல் 2 மணிக்கு குழந்தைகள் தின சிறப்பு நிகழ்வு, மாலை 4 மணிக்கு திரைப்பட நடிகா் எம்.எஸ். பாஸ்கரின் உரையாடல், இரவு 7 மணிக்கு தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியின் கலந்துரையாடல் ஆகியவை இடம்பெறும்.

நேயா்கள் திருச்சி வானொலியின் தீபாவளி நிகழ்வுகளை கேட்டு மகிழ வேண்டும் என நிலைய இயக்குநா் க. நடராசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com