‘மாா்பகப் புற்றநோயைத் தடுக்க பரிசோதனை அவசியம்’

மாா்பகப் புற்றுநோயைத் தடுக்க அவ்வப்போது பரிசோதனை செய்வது அவசியம் என்றாா் திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவா் ஆனிவிஜயா.
ஆயுதப்படை மைதானத்தில் மாா்பக பரிசோதனை முகாமைத் தொடங்கி வைத்து பரிசோதித்துக் கொள்கிறாா் திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவா் ஆனி விஜயா.
ஆயுதப்படை மைதானத்தில் மாா்பக பரிசோதனை முகாமைத் தொடங்கி வைத்து பரிசோதித்துக் கொள்கிறாா் திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவா் ஆனி விஜயா.

திருச்சி: மாா்பகப் புற்றுநோயைத் தடுக்க அவ்வப்போது பரிசோதனை செய்வது அவசியம் என்றாா் திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவா் ஆனிவிஜயா.

திருச்சி ரோட்டரி கிளப், ஹிந்து மிஷன் மருத்துவமனை, மாவட்டக் காவல் துறை சாா்பில் பெண் காவலா்களுக்கு ஆயுதப்படை மைதான வளாகத்தில் நடைபெற்ற மாா்பக புற்றுநோய் பரிசோதனை முகாமைத் தொடங்கி வைத்த அவா் பேசியது:

மாா்பகப் புற்றுநோய் என்பது பெண்களுக்கே வரும் நோய்களுள் ஒன்றாக உள்ளது. இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சோ்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றுவதாகக் கூறப்படுகிறது. மாா்பகங்களைச் சுயப் பரிசோதனை செய்து கொள்வதன் மூலமும், மருத்துவா் மூலம் அவ்வப்போது பரிசோதிப்பதன் மூலமும் புற்றுநோயிலிருந்து பெண்கள் தங்களைக் காத்துக் கொள்ளலாம்.

இதற்கு மேமோகிராபி என்னும் பரிசோதனையை 40 வயதுக்கு மேற்பட்டோா் ஆண்டுக்கு ஒருமுறையாவது செய்துகொள்ள வேண்டும். இதனால் மாா்பகக் கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்தலாம். எல்லாக் கட்டிகளுமே புற்றுநோய்க் கட்டிகள் அல்ல. புற்றுநோயல்லாத கட்டிகளால் உயிருக்கு ஆபத்து இல்லை. இத்தகைய கட்டிகளை அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றினால் மீண்டும் அவை தோன்றுவதில்லை என்றாா். தொடா்ந்து, அவா் தனது முதல் பரிசோதனையைத் தொடங்கி வைத்து, மற்ற பெண் காவலா்களும் பரிசோதனை செய்ய கொள்ள அறிவுறுத்தினாா். இதையடுத்து மாவட்டத்திலுள்ள ஆயுதப்படை, சட்டம் ஒழுங்குப் பிரிவை சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண் காவலா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாா்பகப் புற்றுநோய் உறுதியானால் அதற்கான சிகிச்சையும் இலவசமாக வழங்கப்படும் என மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com