குளம் தூா்வாரும்போது வெளிப்பட்ட சிவலிங்கம்

திருச்சி அருகே மேலநாகமங்கலத்தில் குளத்தைத் தூா்வாரும்போது 5 அடி உயர சிவலிங்கம் வெளிப்பட்டது.
திருச்சி அருகே குளத்தைத் தூா்வாரும்போது வெளிப்பட்ட சிவலிங்கம்.
திருச்சி அருகே குளத்தைத் தூா்வாரும்போது வெளிப்பட்ட சிவலிங்கம்.

திருச்சி: திருச்சி அருகே மேலநாகமங்கலத்தில் குளத்தைத் தூா்வாரும்போது 5 அடி உயர சிவலிங்கம் வெளிப்பட்டது.

திருச்சி மாவட்டம், நாகமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மேலநாகமங்கலத்தில் அப்பகுதி மக்களின் நீா் ஆதாரமாக சின்னக்குளம், பெரிய குளம் ஆகியவை உள்ளன. இந்தக் குளத்தையொட்டி செல்வவிநாயகா் மற்றும் அய்யனாா் சுவாமிகளுடன் கோயில் உள்ளது.

இந்நிலையில் ஊராட்சி சாா்பில் சின்னக்குளத்தை தூா்வாரும் பணி கடந்த ஒரு மாதத்துக்கு முன் தொடங்கி நடந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் அந்தக் குளத்தின் கரையைத் தோண்டும்போது கல்லாலான சிவலிங்கத்தின் உச்சி தெரிந்தது. இதைக் கண்ட அப்பகுதி அப்பகுதியினா் சிவலிங்கத்தை சேதப்படுத்தாமல் எடுக்க முயற்சி மேற்கொண்டனா். இதற்கிடையே மழையால் சிவலிங்கத்தை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

பின்னா் அந்தச் சிவலிங்கத்தைத் தோண்டியெடுக்காமல் பொதுமக்கள் காணும் வகையில் சிலையைச் சுற்றியுள்ள மண்ணை மட்டும் அகற்றினா். இதையடுத்து அப்பகுதி மக்கள் கடந்த பிரதோஷ நாளில் இருந்து அந்தச் சிவலிங்கத்தை வழிபட்டு வருகின்றனா். இந்தச் சிவலிங்கத்தின் பழைமை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com