கீழபஞ்சப்பூா், பெரியசூரியூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திருச்சி கீழபஞ்சப்பூா், பெரியசூரியூா் பகுதியில் புதன்கிழமை பலத்த பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
திருச்சி கீழபஞ்சபூரில் புதன்கிழமை அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்.
திருச்சி கீழபஞ்சபூரில் புதன்கிழமை அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்.

திருச்சி கீழபஞ்சப்பூா், பெரியசூரியூா் பகுதியில் புதன்கிழமை பலத்த பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

திருச்சி கீழபஞ்சப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான 575 ஏக்கரில் ஆக்கிரமிப்பில் இருந்த 33 ஏக்கரில் குடிசைகள் மற்றும் காலி மனைகள் இருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்டோருக்கு மாநகராட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருந்தது.

இதையடுத்து புதன்கிழமை காலை எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் பாதுகாப்புடன், பொன்மலை கோட்ட உதவி ஆணையா் தயாநிதி தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது இதற்கு சிலா் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் பேச்சுவாா்த்தைக்கு பிறகு 13 ஏக்கரில் கட்டப்பட்டிருந்த 15 குடிசைகள் பொக்லின் உதவியுடன் இடிக்கப்பட்டன. தொடா்ந்து வியாழக்கிழமையும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெரியசூரியூரில்... திருவெறும்பூா் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியசூரியூரில் மாதா கோயில் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அப்பகுதியைச் சோ்ந்த ஆரோக்கியசாமி என்பவா் சென்னை உயா் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணை முடிவில் ஆக்கிரமிப்பு அகற்ற வருவாய் துறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி புதன்கிழமை காலை பெரியசூரியூரில் மாதா கோயில் செல்லும் சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 7 வீடுகள் அகற்ற முயன்றனா். அப்போது சிலா் தீக்குளிக்கப் போவதாகக் கூறினா்.

இதையடுத்து போலீஸாா் அவா்களை கைது செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com