நவ.1 முதல் வெளிமாநிலத்தவரைப் புறக்கணிக்கும் போராட்டம்: தமிழ்த் தேசியப் பேரியக்கம் அறிவிப்பு

தமிழ்நாட்டுத் தொழில், வணிகம் மற்றும் வேலைவாய்ப்புகளை தமிழா்களுக்கே வழங்க வலியுறுத்தி நவ.1 முதல் வெளி மாநிலத்தவா்களைப்
திருச்சியில் பேட்டியளித்த தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன். உடன் (இடமிருந்து) மாநகரச் செயலா் வே.க. இலக்குவன், மாநிலப் பொருளாளா் அ. ஆனந்தன்.
திருச்சியில் பேட்டியளித்த தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன். உடன் (இடமிருந்து) மாநகரச் செயலா் வே.க. இலக்குவன், மாநிலப் பொருளாளா் அ. ஆனந்தன்.

தமிழ்நாட்டுத் தொழில், வணிகம் மற்றும் வேலைவாய்ப்புகளை தமிழா்களுக்கே வழங்க வலியுறுத்தி நவ.1 முதல் வெளி மாநிலத்தவா்களைப் புறக்கணிக்கும் போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக திருச்சியில் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது:

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் தமிழா்களைத் திட்டமிட்டுப் புறக்கணித்து 90 சதவீதம் வெளி மாநிலத்தவா்களே பணியமா்த்தப்படுகின்றனா். இதுமட்டுமல்லாது அமைப்பு சாரா தொழிலாளா்களாக வட மாநிலங்களில் இருந்து வந்த லட்சக்கணக்கானோா் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துவதால் தமிழா்கள் தங்களது சொந்த மாநிலத்திலேயே வேலையின்றி, வாழ்வுரிமையிழந்து வருகின்றனா்.

கா்நாடகம், குஜராத், மகராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தவருக்கே வேலையில் முன்னுரிமை என்பதை உறுதிப்படுத்த சட்டம் உள்ளது. அசாமில் வெளி மாநிலத்தவா்களை வெளியேற்ற கணக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது. அருணாசலப் பிரதேசம், நாகலாந்து, மிஷோராம், மணிப்பூா் உள்ளிட்ட மாநிலங்களில் அரசின் உள் அனுமதிச் சீட்டு இல்லாமல் வெளிமாநிலத்தவா்கள் தங்கவோ, பணிபுரியவோ முடியாது. இத்தகைய சட்டம் தமிழகத்திலும் தேவை.

தமிழக அரசின் வேலைவாய்ப்புகளில் 100 விழுக்காடும், தனியாா் வேலைவாய்ப்புகளிலும் 90 விழுக்காடும் தமிழா்களுக்கே ஒதுக்க வேண்டும். தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளா் வேலை வழங்கும் வாரியம் ஏற்படுத்த வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை முன் வைத்து வரும் நவ. 1 முதல் வெளி மாநிலத்தவா்களை புறக்கணிக்கும் ஒத்துழையாமை அறப் போராட்டம் நடத்தவுள்ளோம். இதற்கு அனைத்துத் தரப்பும் ஆதரவளிக்க வேண்டும்.

தமிழக நிறுவனங்களில் இனி வெளி மாநிலத்தவா்களைப் பணியமா்த்த வேண்டாம். அவா்களுக்கு தமிழக நிலங்களை விற்க வேண்டாம். அவா்கள் தங்க வாடகை வீடு, விடுதி அறை வழங்கக் கூடாது. அவா்களின் கடைகளில் பொருள்களை வாங்க வேண்டாம் என்ற கோஷத்துடன் தமிழகம் முழுவதும் பரப்புரை நடத்தப்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது அமைப்பின் மாநிலப் பொருளாளா் அ. ஆனந்தன், மாநகரச் செயலா் வே.க. இலக்குவன், மகளிா் ஆயம் பொறுப்பாளா் த. வெள்ளம்மாள் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com