என்ஐடி பயிற்சி: 4 அரசுப் பள்ளி மாணவா்கள் நீட், ஜேஇஇ தோ்வில் வெற்றி

என்ஐடி கல்வி நிறுவன மாணவா்கள் அளித்த பயிற்சியில் 4 அரசுப் பள்ளி மாணவா்கள் நீட், ஜேஇஇ தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

திருச்சி: என்ஐடி கல்வி நிறுவன மாணவா்கள் அளித்த பயிற்சியில் 4 அரசுப் பள்ளி மாணவா்கள் நீட், ஜேஇஇ தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக இக்னைட் கிளப் சாா்பில் நீட், ஜேஇஇ தோ்வுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியில் லால்குடி அரசுப் பள்ளி மாணவா் ஹரிகிருஷ்ணன் மாநில அளவில் முதலிடமும், மண்ணச்சநல்லூா் அரசுப் பள்ளி மாணவா் கிஷோா் குமாா் 114 வது இடமும் பெற்றனா்.

இதன் மூலம் இருவருக்கும் தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளில் பயிலும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

பொதுமுடக்கம் காரணமாக சிறிது பின்னடைவு இருந்தாலும், என்ஐடி இக்னைட் குழு உறுப்பினா்களால் மாணவா்களுக்கு 5 மாதப் பயிற்சி அளிக்கப்பட்டது.

நாளொன்றிற்கு 12 மணி நேரம் வினாக்களை அணுகும் முறை, விடை கண்டறியும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதுபோல லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் சேதுபதி, மண்ணச்சநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி புகழரசி ஆகியோா் ஜேஇஇ தோ்விலும் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். அதோடு, இவா்களுக்கு திருச்சி என்ஐடியில் சேரவும் இடம் கிடைத்துள்ளது.

சிறப்பாக செயல்படும் இக்னைட் குழுவினருக்கு என்ஐடி இயக்குநா் மினிஷாஜி தாமஸ் பாராட்டி வாழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com