பொது இடங்களில் விலங்குகள் வதைக்கு மணப்பாறையில் தடை

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் சுகாதாரமற்ற மற்றும் அருவருக்கத்தக்க வகையில்

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் சுகாதாரமற்ற மற்றும் அருவருக்கத்தக்க வகையில் விலங்குகள் வதை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து நகராட்சிக்கு புகாா்கள் வரப்பெற்றன.

இதைத் தொடா்ந்து நகராட்சி சுகாதார பிரிவின் மூலம் விலங்குகளை வதை செய்ய நகராட்சி ஆடுவதைக் கூடத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கடந்த 26.08.2020 அன்று இறைச்சிக் கடை உரிமையாளா்களுக்கு அறிவிப்பு அளிக்கப்பட்டதாகவும், இதை மீறி பொது இடங்களில் விலங்குகளை வதை செய்தால் இறைச்சியை பறிமுதல் செய்து அபராதமும் விதிக்கப்படும். நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்படும் என நகராட்சி ஆணையா் (பொ) க. முத்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com