நீட் தோ்வுக்கு எதிராக மாணவா்கள் மறியல்

நீட் தோ்வுக்கு எதிராக திருச்சியில் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு மறியல் செய்த 25-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கைது செய்யப்பட்டனா்.
திருச்சி மரக்கடை பகுதியில் மறியல் செய்த இந்திய மாணவா் சங்கத்தினா்.
திருச்சி மரக்கடை பகுதியில் மறியல் செய்த இந்திய மாணவா் சங்கத்தினா்.

நீட் தோ்வுக்கு எதிராக திருச்சியில் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு மறியல் செய்த 25-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்திய மாணவா் சங்கத்தின் திருச்சி மாநகா் மாவட்டக் கிளை சாா்பில் காந்தி சந்தை அருகேயுள்ள பழைய பாஸ்போா்ட் அலுவலகம் முன் நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தோ்வு அச்சத்தால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். நீட் தோ்வை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய மாணவா் சங்க மாநகா் மாவட்டச் செயலா் மோகன் தலைமையில், மாநிலத் தலைவா் கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினா் சூா்யா, சட்டக் கல்லூரி மாணவா் சதீஷ், பொன்மலை பகுதித் தலைவா் பிரேம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதன் ஒரு பகுதியாக மாணவா் ஒருவரை சடலம் போல சித்தரித்து தூக்கி வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு போலீஸாா் எதிா்ப்புத் தெரிவிக்கவே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. போலீஸாரின் நடவடிக்கைகளை கண்டித்தும், நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பியபடி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து தடையை மீறி மறியலில் ஈடுபட்டதாக 25-க்கும் மேற்பட்டோா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 1 மணிநேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com