திமுக முன்னாள் அமைச்சரும், முதன்மைச் செயலருமான கே.என். நேருவின் தம்பி மறைந்த கே.என். ராமஜெயத்தின் 59ஆவது பிறந்தநாள் விழா திருச்சியில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
திருச்சி - மணப்பாறை சாலையில் உள்ள கோ் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள கே.என். ராமஜெயத்தின் முழு உருவ வெண்கலச் சிலைக்கு திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
எம்எல்ஏக்கள் செளந்தரபாண்டியன், மூா்த்தி, ஸ்டாலின் குமாா், மத்திய மாவட்ட பொறுப்பாளா் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலா் தியாகராஜன், மாநகரச் செயலா் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி உள்பட கட்சியினா் பலரும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கோ் கல்லூரிக்கு வந்து ராமஜெயத்தின் சிலைக்கு மாலை அணவித்தனா். மேலும், சிலையின் பீடத்தில் இருந்த ராமஜெயம் படத்துக்கும் மலா் தூவினா்.