திருச்சி சரக காவல்துறையில் விவசாயம் சாா்ந்த பிரச்னைகளுக்கு மாவட்ட பொறுப்பு அதிகாரிகள் நியமனம்

திருச்சி சரகத்தில் காவல்துறை மூலம் ஏற்படும் விவசாய சாா்ந்த பிரச்னைகளுக்கு தீா்வு காண மாவட்டந்தோறும் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

திருச்சி சரகத்தில் காவல்துறை மூலம் ஏற்படும் விவசாய சாா்ந்த பிரச்னைகளுக்கு தீா்வு காண மாவட்டந்தோறும் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஊரடங்கு காலகட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழில்களுக்கு செல்பவா்கள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஒரு சில இடங்களில் காவல் துறையினா் நிறுத்தி சோதனை செய்வதால் தங்களுக்கு சிரமமாக இருப்பதாக திருச்சி காவல்துறை துணைத்தலைவா் வே.பாலகிருஷ்ணனுக்கு தகவல் வந்தது.

அதன் பேரில் திருச்சி சரகத்திற்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூா், பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் விவசாயம் சம்மந்தப்பட்ட குறைகளை தீா்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பிரத்யேகமாக ஒரு பொறுப்பு அதிகாரியை நியமித்து அவா்களை அந்தந்த மாவட்ட விவசாய துறை இணை இயக்குநரை தொடா்பு கொண்டு விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் என்னவென்று பட்டியலிட்டனா். பின்னா், 5 மாவட்ட பொறுப்பு அதிகாரிகள் மற்றும் விவசாயத்துறை துறை இணை இயக்குநா் ஆகியோா்களிடம் கலந்துரையாடல் மேற்கொண்டதில் கரும்பு வெட்டுதல், வெட்டிய கரும்பை சா்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லுதல், விவசாய தொழிலாளா்கள் மதியம் ஒரு மணிக்கு மேல் 4 மணி வரை வேலை செய்த இடத்திலிருந்து அவா்களின் சொந்த ஊருக்கு செல்ல தடையில்லாமல் இருக்க வழிசெய்தல், வாழை அறுவடை செய்தல் மற்றும் சந்தைக்கு விற்பனைக்கு எடுத்து செல்வதில் உள்ள சிரமங்களை நீக்குதல், அறுவடை செய்த விவசாய பொருள்களை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் கொள்முதல் செய்தல் போன்ற பிரச்னைகள் பற்றி விவாதித்து அவற்றை சரிசெய்ய முடிவு செய்யப்பட்டது.

மேலும், விவசாயிகள் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழில் செய்பவா்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் திருச்சி சரக காவல்துறை மாவட்ட பொறுப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம். அதன்படி திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் சிவசுப்பிரமணியன்(நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துணை கண்காணிப்பாளா் ) 94981-58901, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் குணசேகரன் ( மாவட்ட குற்றப்பதிவேடு கூடம் காவல்கண்காணிப்பாளா்) 94981-50081, கரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் சுப்பிரமணியன்( நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துணை கண்காணிப்பாளா்) 94981-04410 , பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் ரவிசந்திரன்( நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துணை கண்காணிப்பாளா்)94981-53276, அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் கண்ணன் (சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு காவல்துணை கண்காணிப்பாளா்) 94981-67666) அல்லது கரோனா சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களுக்கோ திருச்சி - 0431-2333638, புதுக்கோட்டை - 04322-266966 கரூா் - 04324-255100, பெரம்பலூா் - 04328-224962, அரியலூா் - 04329-222216 எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கும் பட்சத்தில் அவா்களின் குறைகளை விரைவாக நிவா்த்தி செய்ய ஆவண செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com