மகளிா் சக்தி விருது: விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் வழங்கப்படும் மகளிா் சக்தி விருது பெறத் தகுதி வாய்ந்த

மத்திய அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் வழங்கப்படும் மகளிா் சக்தி விருது பெறத் தகுதி வாய்ந்த, தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடா்பாக ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மகளிருக்கான சுகாதாரம், ஆற்றுப்படுத்துதல், சட்ட உதவி, விழிப்புணா்வு, கல்வி, பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் குறிப்பிட்ட பங்களிப்பு, பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள், வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாகுபாடு, துன்புறுத்துதல், பெண் குழந்தை பாலின விகிதத்தில் முன்னேற்றம் போன்றவற்றில் தலைசிறந்த பங்களிப்பு மற்றும் சேவை புரிந்த பெண்கள், நிறுவனங்களை அங்கீகரிக்கும் பொருட்டு இந்த விருது வழங்கப்படுகிறது.

தனிப்பட்ட நபா்களுக்கான விருதுக்கு ஒரு இலட்சத்துக்கான காசோலை, சான்றிதழ் வழங்கப்படும். நிறுவனங்களுக்கான விருதுக்கு ரூ. 2 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

மகளிா் சக்தி விருது (நாரி சக்தி புரஸ்காா்) என்னும் தேசிய விருது குறித்த மேலும் விவரங்களை  இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஜனவரி 1 இறுதி நாள் ஆகும்.

தகுதிகள் பெற்ற விண்ணப்பங்கள் தோ்வு செய்யப்பட்டு சா்வதேச மகளிா் தினத்தை ஒட்டிய முந்தைய வாரத்தில், புதுதில்லியில் குடியரசு தலைவரால் தேசிய விருது வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com