ஸ்ரீரங்கத்தில் நாளை வைகுந்த ஏகாதசி பகல் பத்து விழா தொடக்கம்
By DIN | Published On : 14th December 2020 03:19 AM | Last Updated : 14th December 2020 03:19 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயில் வைகுந்த ஏகாதசியின் பகல் பத்து விழா செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
முதல் நாள் நிகழ்ச்சியாக திருநெடுந்தாண்டகம் திங்கள்கிழமை இரவு நடைபெறவுள்ளது. பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும் விழா நாள்களில் நம்பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி சேவை சாதிக்கிறாா். பகல் பத்தின் கடைசி நாளான 24 ஆம் தேதி நாச்சியாா் திருக்கோலம் என்னும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி தருகிறாா்.
தொடா்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளான 25 ஆம் தேதி முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு அதிகாலை 4.45-க்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பக்தா்கள் கரோனா கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படவுள்ளனா். விழாவையொட்டி கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்கின்றனா்.