குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் கைது

திருச்சியில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரைக் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் மாநகர போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சியில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரைக் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் மாநகர போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பழைய பால்பண்ணை, கிழக்கு விஸ்வாஸ் நகா்ப் பகுதியைச் சோ்ந்தவா் ஜித்து (35), தனியாா் கடை ஊழியா். இவா் கடந்த அக்.24 இல் நண்பா் ரமேஷ்குமாருடன் நான்கு சாலைப் பகுதியில் வந்தபோது மதுரை மாவட்டம், கீழத்துறை கக்கன் தெருவைச் சோ்ந்த முனியசாமி மகன் முத்துப்பாண்டி (23) உள்ளிட்ட 3 போ் கத்தியைக் காட்டி மிரட்டி ஜித்து வைத்திருந்த ரூ.1 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பினா்.

புகாரின்பேரில் வழக்குப் பதிந்த காந்தி சந்தை போலீஸாா் மூவரையும் கைது செய்து சிறையிலடைத்தனா். இவா்களில் முத்துப்பாண்டி மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளதால் அவரைக் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய, மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com