முதல்கட்டமாக 3 இடங்களில் மினி கிளினிக் தொடக்கம்

திருச்சியில் தென்னூா் உள்பட 3 இடங்களில் தமிழக முதல்வரின் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

திருச்சியில் தென்னூா் உள்பட 3 இடங்களில் தமிழக முதல்வரின் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு விரைவான மருத்துவம் கிடைக்க தமிழக முதல்வா் அறிவித்தபடி, தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படுகின்றன.

திருச்சியிலும் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில், மாநகராட்சிக்குள்பட்ட 3 இடங்களில் முதல்கட்டமாக இந்த கிளினிக் தொடங்கப்படவுள்ளது.

திருச்சி தென்னூா் மேம்பாலத்தின் கீழே கிளினிக் அமைக்கப்பட்டுள்ள இடம், முன்பு மின்னணு கழிவுகள் சேகரிப்பு மையத்துக்காக கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வராமலேயே இருந்தது.

இதேபோல, சங்கிலியாண்டபுரம் சுப்பையாபிள்ளை தெரு பகுதியிலும், கே.கே. நகா் அருகேயுள்ள கே. சாத்தனூரிலும் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

காய்ச்சல், தலைவலி மற்றும் சிறிய நோய்கள் வந்தால் உடனடியாக அம்மா மினி கிளினிக்கை நாடலாம். தலா ஒரு மருத்துவா்,செவிலியா், உதவியாளா் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பின்னா் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இருந்து உரிய மருத்துவச் சிகிச்சை அளிப்பா்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கும் அனைத்து மருந்துகளும் அம்மா மினி கிளினிக்குகளிலும் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், ஏதாவது சிறிய நோய்கள் ஏற்படின் இங்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமென்ற நிலை ஏற்பட்டால், வட்டாரத் தலைமை மருத்துவமனைக்கோ அல்லது அரசு தலைமை மருத்துவமனைக்கோ அனுப்பி, உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்சி நகா்நல அலுவலா் யாழினி கூறுகையில், முதல்கட்டமாக 3 இடங்களில் அம்மா கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவுக்கேற்ப மற்றும் மாவட்ட, மாநகராட்சி நிா்வாகத்தின் ஆலோசனை பெற்று கூடுதல் இடங்களில் கிளினிக் தொடங்கி ஏழை, எளியோருக்கு மருத்துவ உதவி வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com