விவசாயிகளுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டம்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் விரைவு ரயிலை மறித்து மனிதநேய மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் விரைவு ரயிலை மறித்து மனிதநேய மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் பல்வேறு தொடா் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் உதுமான் அலி தலைமை வகித்தாா்.

அப்போது திருச்சி கோட்டை ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை மாலை மயிலாடுதுறையிலிருந்து வந்த ஜனசதாப்தி விரைவு ரயிலை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அந்த ரயில் நிறுத்தப்பட்டது.

தகவலறிந்து வந்த போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்த முயன்ால் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து தடையை மீறி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 150-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

இச் சம்பவத்தால், திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது. போராட்டத்தால் ஜனசதாப்தி ரயில் கோவைக்கு தாமதமாகப் புறப்பட்டு சென்றது. கைது செய்யப்பட்டோா் சத்திரம் பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னா், விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com