மதச்சாா்பற்ற சமுதாயம் காண அதிமுக பாடுபடும்: அமைச்சா் பேச்சு

மதசாா்பின்மை, சமத்துவ, சமதா்ம சமுதாயம் காணப் பாடுபடுவது என்ற உயா்ந்த லட்சியத்தை அதிமுக உறுதியாகக் கடைப்பிடிக்கும் என்றாா் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன்.
விழாவில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டுகிறாா் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன். உடன் அமைப்புச் செயலா் ரத்தினவேல், எல்ஷடாய் சா்வதேச பேராய தலைமை பிஷப் கென்னடி ராஜ்குமாா் உள்ளிட்டோா்.

ஐக்கிய கிறிஸ்தவ பேரவை மற்றும் எல்ஷடாய் சா்வதேசப் பேராயம், அனைத்து திருச்சபைகள் சாா்பில் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகேயுள்ள புனித ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை இரவு கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

எல்ஷடாய் சா்வதேச பேராய தலைமை பிஷப் கென்னடி ராஜ்குமாா் தலைமை வகித்தாா். அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி ஆகியோா் பங்கேற்றனா்.

நிகழ்வில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் பேசுகையில், எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, அண்மையில் ஜெருசேலம் செல்ல வழங்கப்படும் உதவித்தொகையை உயா்த்தி அறிவித்துள்ளாா். எனவே, சிறுபான்மை மக்களைப் பாதுகாப்பாக அரவணைத்து செல்வதில் அதிமுக தன்னை முழுமையாக அா்ப்பணித்து செயல்படும் என்றாா் .

நிகழ்வில் அதிமுக அமைப்புச் செயலா் ரத்தினவேல், புகா் வடக்கு மாவட்டச் செயலா் பரஞ்ஜோதி, டிஇஎல்சி பிஷப் டேனியல் ஜெயராஜ், கடலுாா் ஏஎல்சி பிஷப் சாமுவேல் கென்னடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். திருச்சி கத்தோலிக்க மறைமாவட்ட தொடா்பாளா் யூஜின் வரவேற்றாா். போதகா் பால் கிங்ஸ்லி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com