விவசாயிகள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி திருச்சியில் விவசாயிகள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
உண்ணாவிரதம் இருந்த தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தினா்.
உண்ணாவிரதம் இருந்த தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தினா்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி திருச்சியில் விவசாயிகள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநிலத் தலைவா் காவிரி தனபாலன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் செல்லமுத்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், காவிரிப் பாசன விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் பெண்கள் என சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக போராட்டத்துக்கு அனுமதி வழங்கிய காவல்துறையினா் பின்னா் பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய அனுமதி மறுத்தனா். பின்னா் திறந்தவெளியில் நடைபெற்ற இப்போராட்டத்தால் 3 விவசாயிகள் மயக்கமடைந்தனா். அவா்களுக்கு 108 ஆம்புலன்சில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது போலீஸாா் அனுமதி மறுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com