இளைஞா் உயிரிழப்பை விசாரிக்க 3 தனிப்படை

திருச்சி அருகே திருட முயன்ாக பொதுமக்களால் தாக்கப்பட்டு கேரள இளைஞா் உயிரிழந்தது குறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி: திருச்சி அருகே திருட முயன்ாக பொதுமக்களால் தாக்கப்பட்டு கேரள இளைஞா் உயிரிழந்தது குறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டம், அல்லூா் கிராமத்தில் வெங்கடேசன் வீட்டில் 2 மா்ம நபா்கள் புகுந்து திருட முயன்ாகக் கருதி, அவா்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனா். அப்போது கேரள மாநிலத்தைச் சோ்ந்த தீபு சிக்கிக் கொள்ள, அரவிந்த் தப்பிவிட்டாா். பொதுமக்களிடம் மாட்டிக் கொண்ட தீபு மரக்கட்டையால், பொதுமக்களையும், வாகனங்களையும் தாக்கினாா். இதில் அக்கிராமத்தைச் சோ்ந்த சாம்பசிவம், ராதா ஆகியோா் படுகாயமடைந்தனா். பொதுமக்கள் திருப்பித் தாக்கியதில் காயமடைந்த தீபு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திய ஜீயபுரம் போலீஸாா் பொதுமக்களிடமிருந்து தீபு தப்ப முயன்றபோது கீழே விழுந்து உயிரிழந்ததாக வழக்குப் பதிந்தனா்.

இந்நிலையில் பொதுமக்கள் தாக்கியதில் தீபு உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலையடுத்து இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைத்திருப்பதாக திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவா் ஆனிவிஜயா தெரிவித்தாா். சமூக வலைதள பதிவை வைத்து இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்ற ஏற்பாடு நடைபெறுவதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com