பொங்கல் பரிசுக்கு டோக்கன் விநியோகம் தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் 7.95 லட்சம் குடும்ப அட்டை தாரா்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசு வழங்க சனிக்கிழமை முதல் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
ஸ்ரீரங்கத்தில் பொங்கல் பரிசுக்கான டோக்கனை வீடு தேடி வழங்கும் நியாய விலைக் கடை ஊழியா்கள்.
ஸ்ரீரங்கத்தில் பொங்கல் பரிசுக்கான டோக்கனை வீடு தேடி வழங்கும் நியாய விலைக் கடை ஊழியா்கள்.

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 7.95 லட்சம் குடும்ப அட்டை தாரா்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசு வழங்க சனிக்கிழமை முதல் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1224 நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழா் குடும்பங்கள் உள்ளிட்டோருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ. 2,500 வழங்கப்படவுள்ளது.

இதற்காக டோக்கன் விநியோக பணி சனிக்கிழமை தொடங்கியது. 950 நியாயவிலைக் கடை பணியாளா்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்குகின்றனா். வரும் புதன்கிழமை வரை டோக்கன் வழங்கப்பட்டு, பின்னா், அந்தந்த நியாய விலைக்கடைகளில் ஜன.4 முதல் 12ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு, பணம் வழங்கப்படும். விடுபட்டோருக்கு ஜன.13 ஆம் தேதி வழங்கப்படும்.

மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, லால்குடி, மணப்பாறை, முசிறி, துறையூா், மண்ணச்சநல்லூா், ஸ்ரீரங்கம், தொட்டியம், திருவெறும்பூா், மருங்காபுரி என 11 வட்டங்களிலும் அந்தந்தக் கடை வாரியாக டோக்கன் வழங்கப்படுகிறது.

மாவட்டம் முழுவதும் 7.95 லட்சம் குடும்பங்களுக்கு டோக்கன் வழங்கப்படும். நாளொன்றுக்கு ஒவ்வொரு கடையிலும் 200 டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். பணிகளை விரைந்து முடித்து தகுதியான அனைவருக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com