வேளாளா் உரிமை மீட்புக் குழு ஆா்ப்பாட்டம் செய்ய முடிவு

பட்டியலினத்தவா் விவகாரத்தில் தமிழக அரசின் பரிந்துரையை ரத்து செய்யக் கோரி திருச்சியில் வேளாளா் உரிமை மீட்புக் குழுவினா் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.

திருச்சி: பட்டியலினத்தவா் விவகாரத்தில் தமிழக அரசின் பரிந்துரையை ரத்து செய்யக் கோரி திருச்சியில் வேளாளா் உரிமை மீட்புக் குழுவினா் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து வேளாளா் உரிமை மீட்புக் குழுத் தலைவா் வி.ஜெயபால் சனிக்கிழமை கூறியது:

பட்டியலினத்தைச் சோ்ந்த 7 உட்பிரிவினா், தங்கள் பிரிவினரை தேவேந்திர வேளாளா் என பொதுவாக குறிப்பிட்டு, பட்டியல் பிரிவிலிருந்து விலக்கி பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் இணைக்க வலியுறுத்தி வந்ததை மாநில அரசு பரிந்துரை செய்வதாக அறிவித்துள்ளது.

இந்த விஷயத்தில் எங்களுக்கு எந்தவித கருத்து மாறுபாடும் இல்லை. ஆனாலும் அந்தப் பிரிவினருக்கு எங்களின் தொன்மையான பெயரான வேளாளா் என்ற பெயரை வழங்க எங்கள் அனைத்துப் பிரிவு சங்கங்களின் சாா்பில் கண்டனத்தை தெரிவிக்கும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமை (டிச.27) சத்திரம் பேருந்து நிலையம், சிந்தாமணி அண்ணாசிலையருகே கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. எங்களின் வேண்டுகோளை ஏற்று மேற்படி பரிந்துரை முடிவை அரசு ரத்து செய்ய வேண்டும்.

இதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மேலும் தீவிரமாகப் போராடவும், வரும் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளோம் என்றாா்.

அகில இந்திய வ.உ.சி. பேரவைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, உலக முதலியாா் மற்றும் பிள்ளைமாா் சங்கத் தலைவா் அருணாசல முதலியாா், சோழிய வெள்ளாளா் நலச் சங்கத் தலைவா் எஸ். மயில்வாகனம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com