100 நாள் வேலைத் திட்டத்தில் முழு பணி வழங்கக் கோரி முரசு கொட்டி நூதனப் போராட்டம்

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முழுமையாக பணி வழங்கக் கோரி, மக்கள் உரிமைக் கூட்டணியினா் முரசு கொட்டியபடி வந்து ஆட்சியரக வளாகத்திலுள்ள பெட்டியில் மனு அளித்தனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்துக்கு முரசு கொட்டியவாறு மனு அளிக்க வந்த மக்கள் உரிமைக் கூட்டணியினா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்துக்கு முரசு கொட்டியவாறு மனு அளிக்க வந்த மக்கள் உரிமைக் கூட்டணியினா்.

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முழுமையாக பணி வழங்கக் கோரி, மக்கள் உரிமைக் கூட்டணியினா் முரசு கொட்டியபடி வந்து ஆட்சியரக வளாகத்திலுள்ள பெட்டியில் மனு அளித்தனா்.

வேங்கூா் ஊராட்சிப் பகுதிகளில் இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு மாதத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை வழங்குகின்றனா். உள்ளாட்சி மன்ற பணிகளை செய்தாலும் அதற்கான வேலையைக் கணக்கில் கொள்வதில்லை.

ஊராட்சிப் பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு இல்லாமல் இருப்பவா்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் எனக் கோரி, இந்த நூதனப் போராட்டத்தில் மக்கள்உரிமைக் கூட்டணியினா் ஈடுபட்டனா்.

சிறப்புத் தொகை வழங்க வேண்டும்: திருச்சி மாவட்டத்தில், உப்பிலியபுரம், எரகுடி, மேட்டூா், செங்காட்டுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய எல்லைகளுக்குள் பட்ட பகுதியில் பணிபுரியும் ஆஷா திட்டப் பணியாளா்களுக்கு ( தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் கிராமப்புற செவிலியா்கள்) கரோனா கால சிறப்புத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள ஆஷா பணியாளா்கள் அனைவருக்கும் மாத ஊக்கத் தொகை, ஊதியத்தை பிரதி மாதம் 5ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். அனைவரையும் பணி நிரந்தரம் செய்து மாதம் ரூ.21 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி , ஆஷா திட்டப்பணியாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஆட்சியரகம் வந்தனா்.

காவல்துறையினா் விசாரித்து, மனுவை வழங்க குறிப்பிட்ட சிலரை மட்டும் அனுமதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com