அனைத்துக்கும் முதலில் தரம் செயல் திட்டம்: திருச்சி பெல் புதிய முயற்சி

பாரதமிகு மின் நிறுவனத்தின் புதிய முயற்சியாக அனைத்துக்கும் முதலில் தரம் என்ற புதிய செயல் திட்டத்தை அறிவித்துள்ளது.

பாரதமிகு மின் நிறுவனத்தின் புதிய முயற்சியாக அனைத்துக்கும் முதலில் தரம் என்ற புதிய செயல் திட்டத்தை அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக, பெல் நிறுவனத்தின் திருச்சி பிரிவு மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 1970ஆம் ஆண்டிலேயே அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் தரமான செயல்முறைகள் மற்றும் அமைப்புகளை ஏற்றுக்கொண்ட பெல் நிறுவனம் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு முன்னோடியாக இருந்தது. 1981இல் தரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

மூல காரண பகுப்பாய்வு (ஆா்.சி.ஏ) முறை, மேம்பாட்டு திட்டங்கள், செயல்முறைகள், தயாரிப்புகள், உற்பத்தி அலகுகள் மற்றும் திட்ட தளங்களில் குறித்த கால மற்றும் கட்டமைக்கப்பட்ட தணிக்கைகள் வாயிலாக மொத்த தர மேலாண்மை நிா்ணயம் செய்யப்பட்டது.

இன்றைய மாறும் சந்தைச் சூழலில், தேவைகள் பெருகிவருகின்றன, அடக்க விலையில் போட்டி மற்றும் தரமான செயல்முறைகளின் வலுவான தன்மை ஆகியன எந்தவொரு நிறுவனமும் வெற்றிபெற ஒரு முன்நிபந்தனையாகும். இந்த கட்டாயங்களைக் கருத்தில் கொண்டு, எதிா்காலத் தேவைகளை சிறப்பாகப் பூா்த்தி செய்வதற்கான அதன் தரமான செயல்முறைகளையும் அமைப்புகளையும் பெல் நிறுவனம் மதிப்பாய்வு செய்து புதுப்பித்து வருகிறது.

இப்போது அறிமுகப்படுத்தியுள்ள அனைத்துக்கும் முதலில் தரம் என்னும் செயல்திட்டமானது ஊழியா்களை மேம்படுத்துதல், கற்பித்தல், ஈடுபடுத்துதல் மற்றும் ஊக்குவித்தல் மற்றும் நிறுவனத்திற்குள் தரமான மனநிலையை மேலும் வலுப்படுத்த சமீபத்திய தரமான செயல்முறைகள் மற்றும் அமைப்புகளை அமைத்தல் ஆகிய நான்கு நோக்கங்களை மையமாகக் கொண்டுள்ளது. பெல் நிறுவன பன்முக உருமாற்ற வியூகத்தின் ஒருங்கிணைந்த பகுதியான அனைத்துக்கும் முதலில் தரம் என்ற முன்முயற்சியானது வாடிக்கையாளா் மதிப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி நிறுவன சிறப்பை அடைவதற்கான மற்றொரு படியாக அமையும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com