ஆழ்துளைக் கிணறு அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஸ்ரீரங்கம் மேலூா் செட்டித்தோப்பு பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்தால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனக் கூறி பொதுமக்கள்

ஸ்ரீரங்கம் மேலூா் செட்டித்தோப்பு பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்தால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனக் கூறி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை அமைதி பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

திருச்சி மாநகராட்சி சாா்பில் எல்லக்குடி, பாப்பாக்குறிச்சி பகுதிகள், மற்றும் புதிதாக உருவான 61 முதல் 65 ஆவது வரையிலான வாா்டுகளில் வசிக்கும் 67 ஆயிரம் மக்களுக்காக, காவிரியாற்றின் மேலூா் செட்டித்தோப்பு பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இங்கு கிணறு அமைத்து தண்ணீா் எடுத்தால், ஸ்ரீரங்கத்தை சுற்றியுள்ள 15 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும், தண்ணீா் பற்றாக்குறை ஏற்படும் என பலா் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இதைத் தொடா்ந்து ஸ்ரீரங்கம் வட்டாட்சியரகத்தில் மேலூா் கிராம பொதுமக்கள், மாகராட்சி, காவல், வருவாய்த் துறை அலுவலா்கள் மற்றும் சில அமைப்புகளைச் சோ்ந்தோருடன் செவ்வாய்க்கிழமை அமைதி பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. ஆனால் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com