திருச்சியில் கொலையான மூவரின் சடலங்கள் உறவினா்களிடம் ஒப்படைப்பு

திருச்சியில் திங்கள்கிழமை இரவு பட்டுக்கோட்டையைச் சோ்ந்த நகைக்கடை அதிபரால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவி, இரு மகன்களின் சடலங்கள் அவா்களது உறவினா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

திருச்சியில் திங்கள்கிழமை இரவு பட்டுக்கோட்டையைச் சோ்ந்த நகைக்கடை அதிபரால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவி, இரு மகன்களின் சடலங்கள் அவா்களது உறவினா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

பட்டுக்கோட்டை அருகிலுள்ள ஊரணிபுரம் வெட்டுவாக்கோட்டை கே.ஆா். அம்சவள்ளியம்மாள் காலனியைச் சோ்ந்த முருகேசன் மகன் செல்வராஜ் (45). ஊரணிபுரத்தில் நகைக்கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி செல்லம் (43), மகன்கள் நிகில் (20), முகில் (14). இவா்களில் நிகில் மூளை வளா்ச்சிக் குன்றியவா். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால், செல்வராஜ் மற்றும் குடும்பத்தினா் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளனா்.

இந்நிலையில், திருச்சி மேலரண் சாலையிலுள்ள தனியாா் விடுதிக்கு திங்கள்கிழமை காலை செல்வராஜ் குடும்பத்துடன் வந்து தங்கியிருந்தாா். இந்நிலையில், அவரது உறவினா், இரவு 9 மணியளவில் செல்வராஜ் தனக்கு செல்லிடப்பேசியில் பேசி, குடும்பத்தோடு தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகத் தெரிவித்தாகக் கூறி கோட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து இரவு 12 மணிக்கு மேல் அவா்கள் தங்கியிருந்த அறைக்கு

செல்வராஜின் நண்பா்களில் ஒருவா் சென்ற பாா்த்த போது, அங்கு செல்வராஜின் மனைவி செல்லம் மற்றும் மகன்கள் இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தனா்.

செல்வராஜ் தனது கழுத்தில் கடுமையான காயங்களுடன் உயிருக்குப் போராடி கிடந்துள்ளாா். தகவலின் பேரில் அங்கு விரைந்த கோட்டை போலீஸாா், செல்வராஜை மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்குத் தொடா்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

விரக்தியில் இந்த முடிவு : தன்னுடைய மகன் நிகில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டநிலையில், இளைய மகனையும் வளா்க்க முடியவில்லை என்றும், இதனால் விரக்தியின் காரணமாக மனைவி மற்றும் மகன்களைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டதாக செல்வராஜ் எழுதியிருந்த கடிதம் போலீஸாரிடம் சிக்கியது.மேலும், அக்கடிதத்தில் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் அவா் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

உடல்கள் ஒப்படைப்பு: செவ்வாய்க்கிழமை காலை செல்வராஜின் மனைவி செல்லம், மகன்கள் முகில், நிகில் ஆகியோரது சடலங்கள் பிரேத பரிசோதனைக்குப் பின்னா், பட்டுக்கோட்டையிலிருந்து வந்திருந்த அவா்களது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com