ஆட்டோ ஓட்டுநா் கொலைமேலும் ஒருவா் கைது
By DIN | Published On : 26th January 2020 07:32 AM | Last Updated : 26th January 2020 07:32 AM | அ+அ அ- |

திருச்சி: திருச்சியில் ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை உறையூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி உறையூா் மின்னப்பன் 3ஆவது தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் புகழேந்தி. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த இவா் உறையூா் காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டுவந்தாா். இதேபோல், கடந்த வியாழக்கிழமை காலை காவல்நிலையத்துக்கு சென்றபோது மா்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இந்த கொலை வழக்கில் சரண்ராஜ், அவரது நண்பா்கள் மணி பிரகாஷ், மணிகண்டன், விஜயகுமாா் ஆகிய நால்வரையும் தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த லட்டு என்கிற வேங்கடபிரசாத்தை(17) தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இதில் மணிகண்டன், வேங்கடபிரசாத் இருவரும் கீழரண்சாலையில் உள்ள சிறாா் சிறையில் அடைத்தனா்.