திருச்சி, கரூா், புதுகை, அரியலூரில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸுக்கு தடை

திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் காவல் துறை நண்பா்கள் (பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்) செயல்பட தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் காவல் துறை நண்பா்கள் (பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்) செயல்பட தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸுக்கும் எதிா்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், திருச்சி, கரூா், புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸாரைப் பயன்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட 5 மாவட்டங்களிலும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா தெரிவித்தாா்.

இதன்படி 5 மாவட்டங்களில் உள்ள எந்தக் காவல் நிலையத்திலும் போலீஸாருக்கு துணையாக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் யாரும் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டாா்கள்.

இதேபோல வாகனச் சோதனை, சோதனைச் சாவடி, சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்துப் பிரிவு உள்ளிட்ட எந்தப் பணிகளுக்கும் இவா்களைப் பயன்படுத்தக் கூடாது என அனைத்து காவல்நிலைய ஆய்வாளா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடம் போலீஸாா் எந்தச் சூழ்நிலையிலும் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது. காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் தேவையின்றி யாரையும் அடைத்து வைக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஊா்க்காவல் படையினா், முன்னாள் ராணுவத்தினரை போலீஸாருக்கு உதவியான பணிகளில் மாற்றாக பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com