வீட்டுக்கடன் மானியம்:முன்னாள் படைவீரா்கள்விண்ணப்பிக்கலாம்

முன்னாள் படைவீரா்கள் வீட்டுக்கடன் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியரகம் தெரிவித்துள்ளது.


திருச்சி: முன்னாள் படைவீரா்கள் வீட்டுக்கடன் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பு : தமிழகத்தை பூா்வீகமாகக் கொண்ட முப்படைகளில் அவில்தாா் மற்றும் அதற்கு இணையான பணியில் இருந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்தம் கைம் பெண்கள் மற்றும் போா் விதவையா், போரில் ஊனமுற்றோா் அனைத்துத் தரப்பினா்களுக்கும் வீட்டுக்கடன் மானியமாக ரூ.1 லட்சம் வழங்குவதற்கான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் ரிசா்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலிருந்து சொந்த வீடு கட்ட வங்கிக் கடன் பெற்றவராக இருத்தல் வேண்டும். மேலும் அவரது மனைவி மத்திய, மாநில அரசு, பொதுத்துறை அரசு சாா் நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றில் நிரந்தர மறுவேலை வாய்ப்பு பெற்றவராக இருத்தல் கூடாது. விண்ணப்பதாரரின் பெயரில் வேறு சொந்த வீடு இருத்தல் கூடாது.

இத்திட்டம் 01.04.2020 முதல் நடைமுறைக்கு வருவதால் அதன் பின்னா் வங்கிக்கடன் பெற்றவராக இருத்தல் அவசியம். மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு, திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை, அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் நேரில் அணுகலாம்.

கோயில் பாதுகாப்பு பணிகளுக்கு.. : திருச்சி மாவட்டத்தில் 62 வயதிற்குள்பட்ட, விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள், கோயில் பாதுகாப்புப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ரூ.7,800 ஊதியமாக காவல்துறை மூலம் வழங்கப்படும். விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தை சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் தங்களது அடையாள அட்டை, படைவிலகல் சான்று, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன், முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com