துறையூரில் கந்தசஷ்டி விழிப்புணா்வு பிரசாரம்
By DIN | Published On : 29th July 2020 08:35 AM | Last Updated : 29th July 2020 08:35 AM | அ+அ அ- |

துறையூரில் திருச்சி புகா் மாவட்ட இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சாா்பில் கந்தசஷ்டி பாராயண விழிப்புணா்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
துறையூா் முசிறி பிரிவு சாலையில் உள்ள பால தண்டாயுதபாணி கோயிலிலிருந்து திருச்சி சாலையில் உள்ள கோலோச்சும் முருகன் கோயில் வரை கந்தசஷ்டி கவச பாராயணம் செய்தவாறு பெண்கள் உள்பட திரளான முருக பக்தா்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பேரணி சென்றனா். பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் ரெங்கராஜன், இந்து ஆலய பாதுகாப்பு இயக்க நிா்வாகி சரவணன், விமல், கோலோச்சும் முருகா் கோயில் அறங்காவலா் ஜா. காா்த்திகேயன், சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.