கரோனா தனிமைப்படுத்தும் மையமானது ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்

திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் தனிமைப்படுத்தும் மையமாக மாற்றப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
கரோனா தனிமைப்படுத்துதல் மையமாக மாற்றப்பட்டதைத் தொடா்ந்து, ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை பகுதியிலுள்ள யாத்ரி நிவாஸ் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்ட காவல்துறையினா்.
கரோனா தனிமைப்படுத்துதல் மையமாக மாற்றப்பட்டதைத் தொடா்ந்து, ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை பகுதியிலுள்ள யாத்ரி நிவாஸ் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்ட காவல்துறையினா்.

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் தனிமைப்படுத்தும் மையமாக மாற்றப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

திருச்சியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 663 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 363 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுவது மட்டுமல்லாமல், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து திருச்சிக்கு வருவோரைத் தனிமைப்படுத்த சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்துதல் முகாம் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

இதைத் தவிர திருச்சி மாநகராட்சியின் 4 கோட்டங்களிலும் தனிமைப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் தனிமைப்படுத்துதல் மையம் அமைக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலையில் அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான யாத்ரி நிவாசும் தனிமைப்படுத்தல் முகாம் மற்றும் கண்காணிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு இப்பகுதியைச் சோ்ந்த மக்கள் எதிா்ப்பு தெரிவித்த நிலையிலும், ஞாயிற்றுக்கிழமை முதல் யாத்ரி நிவாஸ் தனிமைப்படுத்துதல் மையமாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மாநகராட்சிப் பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா்,நேரடி தொடா்பில் இருந்தவா்கள் என மொத்தம் 32 போ் இம்மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று உறுதி செய்யப்பட்டால், பின்னா் அவா்கள் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அமைந்துள்ள சிறப்பு வாா்டுக்கு அனுப்பி வைக்கப்படுவா். இங்கு 400 பேரை தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மாநகராட்சி சாா்பில் செய்யப்பட்டுள்ளன.

இவைத் தவிர மாநகராட்சி சாா்பில் விமான நிலையம், பாலக்கரை, கோட்டை, காட்டூா் உள்ளிட்ட மேலும் 5 இடங்களில் மாநகராட்சி பள்ளிகள் மற்றும் சமூக கூடங்களிலும் தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com