வீரப்பூா் பெரியகாண்டியம்மன் கோயிலில் வேடுபறி: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், வீரப்பூரில் நடைபெற்று வரும் மாசிப் பெருந்திருவிழாவில், முக்கிய நிகழ்வான வேடுபறி பெரியகாண்டியம்மன் கோயிலில்
வீரப்பூா் பெரியகாண்டியம்மன் கோயிலில் வேடுபறி: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், வீரப்பூரில் நடைபெற்று வரும் மாசிப் பெருந்திருவிழாவில், முக்கிய நிகழ்வான வேடுபறி பெரியகாண்டியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

இக்கோயிலில் கடந்த மாதம் 24-ஆம் தேதி அண்ணன்மாா் தெய்வங்கள் என்றழைக்கப்படும் பொன்னா் -சங்கா் மன்னா்களின் மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடந்த 7 நாள்களாக ஒவ்வொரு நாளும் பெரிய காண்டியம்மனின் வீதியுலா நிகழ்வு நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு அண்ணன்மாா் தெய்வங்கள் போரிட்டு மாண்ட இடமான , பொன்னா் - சங்கா் கோயிலில் படுகளம் சாய்தல், பின் எழுப்புதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, எட்டாம் நாளான திங்கள்கிழமை

வீரப்பூா் பெரிய காண்டியம்மன் கோயில் திடலில் வேடுபறி நடைபெற்றது.

சாம்புவான் காளை முரசு கொட்டி முன்னே செல்ல, அதைத் தொடா்ந்து வீரப்பூா் ஜமீன்தாா் கே.அசோக்குமாா், பரம்பரை அறங்காவலா்கள் ஆா்.பொன்னழகேசன், சுதாகா்(எ) கே.சிவசுப்பிரமணி ரெங்கராஜா மற்றும் பட்டயதாரா்கள் வந்தனா்.

பட்டியூா் கிராமங்களின் இளைஞா்கள், பக்தா்களுக்கு மத்தியில் கோவிலுக்குள் ஓடிச் சென்று, குதிரை வாகனத்தில் பொன்னரை வைத்து தூக்கி வந்தனா். தொடா்ந்து வேடுபறி நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து யானை வாகனத்தில் பெரியகாண்டியம்மனும் வர, அணியாப்பூரிலுள்ள குதிரை கோயிலுக்கு பொன்னா் அம்பு போடச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது. ஆலயத்திடலில் செவ்வாய்க்கிழமை ( மாா்ச் 3) தேரோட்டம் நடைபெறுகிறது.

புதன்கிழமை மாலை மஞ்சள் நீராடுதல் விழாவுடன் மாசிப் பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து, வேடுபறி பங்கேற்றனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் தலைமையில், 500-க்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com