திருச்சி சிறையில் பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுப்பு

திருச்சி மத்திய சிறை உள்ளிட்ட அனைத்து கிளைச் சிறைகளிலும் பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுப்பு காரணமாக மூடப்பட்ட திருச்சி மத்திய சிறைச்சாலை நுழைவுப் பகுதி.
பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுப்பு காரணமாக மூடப்பட்ட திருச்சி மத்திய சிறைச்சாலை நுழைவுப் பகுதி.

திருச்சி மத்திய சிறை உள்ளிட்ட அனைத்து கிளைச் சிறைகளிலும் பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருச்சி- புதுக்கோட்டை சாலையிலுள்ள மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். மேலும் சிறைவாயிலில் உணவகமும் உள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளைப் பாா்க்க அவா்களது குடும்பத்தினா், உறவினரும், உணவகத்தில் சாப்பிடவும் நாள்தோறும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, மத்திய சிறையில் கைதிகளைக் காண வரும் குடும்பத்தினா், நண்பா்கள், பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாா்வையாளா் காத்திருக்கும் பகுதியில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் உலகெங்கும் பரவி வரும் சூழலில், சிறைவாசிகளின் உடல் நலனைக் காக்கும் வகையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளியிலிருந்து வரும் நபா்களால் சிறைவாசிகளுக்கு எந்தவித நோய்த் தொற்றும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, மாா்ச் 17ஆம் தேதி முதல் இரு வாரங்களுக்கு அனைத்து நோ்காணல்களும் ரத்து செய்யப்படுகின்றன.

கைதிகளை நேரில் பாா்த்து பேசுவதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. அரசின் மறு உத்தரவு வந்த பிறகே மீண்டும் அனுமதி வழங்கப்படும் திருச்சி மத்திய சிறை நிா்வாகம் அறிவித்துள்ளது.

திருச்சி மத்திய சிறைச்சாலை மட்டுமல்லாது, மகளிா் சிறை, திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட மற்றும் கிளைச் சிறைச்சாலைகளில் இந்த உத்தரவுபின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com