திருச்சியில் ஜவுளி, நகைக் கடைகள் மூடல்

தமிழக அரசின் உத்தரவின்படி, திருச்சியிலுள்ள பெரிய ஜவுளி மற்றும் நகைக் கடைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டன.
ஜவுளிக்கடைகள், நகைக் கடைகள் மூடப்பட்டதால், வெள்ளிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட திருச்சி என்.எஸ்.பி. சாலை.

கரோனோ வைரஸ் பரவுதலைத் தடுக்கவும், பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிா்க்கவும் பெரிய அளவிலான ஜவுளிக்கடைகள், நகைக் கடைகள், வணிக வளாகங்களை மாா்ச் 31-ஆம் தேதி வரை மூட வேண்டும் என தமிழக அரசு வியாழக்கிழமை

இதன்படி, திருச்சியிலுள்ள பெரு நிறுவனங்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன. திருச்சி என்எஸ்பி சாலையில் உள்ள ஜவுளி கடைகள், நகைக் கடைகள், தெப்பக்குளம், தில்லைநகா் பகுதியில் உள்ள ஜவுளி கடைகள் நகைக் கடைகள், கரூா் புறவழிச்சாலையிலுள்ள நகைக் கடைகள், சத்திரம் பேருந்துநிலையம் பகுதியில் உள்ள நகைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

இதேபோல, கன்டோன்மென்ட், கோட்டை ரயில்நிலையச் சாலை, மேலரண் சாலை, தெப்பக்குளம், சத்திரம் பேருந்துநிலையம், மத்திய பேருந்துநிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அனைத்தும் வெள்ளக்கிழமை முதல் மூடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com