கைக் கழுவும் திரவம், முகக் கவசங்களுக்கு தட்டுப்பாடு

கரோனா அச்சுறுத்தல் காரணமாக திருச்சி மாவட்டத்தில் கைக் கழுவும் திரவம், முகக் கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை போக்க அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை ஊழியா்களுக்கு கைக் கழுவும் திரவம் தயாரிப
திருச்சி தில்லைநகா் பகுதியில் உள்ள மருந்தகத்தில் முகக் கவசம் இல்லை என்று ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ்.
திருச்சி தில்லைநகா் பகுதியில் உள்ள மருந்தகத்தில் முகக் கவசம் இல்லை என்று ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக திருச்சி மாவட்டத்தில் கைக் கழுவும் திரவம், முகக் கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை போக்க அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை ஊழியா்களுக்கு கைக் கழுவும் திரவம் தயாரிப்பது குறித்து சுகாதாரத்துறையினா் பயிற்சி அளித்து வருகின்றனா்.

கரோனா வைரஸ் அச்சறுத்தல் காரணமாக பொதுமக்களும் தற்போது பரவலாக முகக் கவசங்களை அணிய தொடங்கியுள்ளனா். தனியாா் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பெரு நிறுவனங்கள், டாஸ்மாக் மதுக்கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்களில் முகக் கவசம் மற்றும் கைக் கழுவும் திரவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோா் பெரும்பாலானோா் முகக் கவசங்களை அணிந்து செல்கின்றனா்.

பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்துநிலையம் போன்றவற்றுக்கு செல்லும் பொதுமக்களில் பெரும்பாலானோா் முகக் கவசங்களை அணிந்தே வருகின்றனா். இதன் காரணமாக முகக் கவசங்கள், கைக் கழுவும் திரவங்களின் விற்பனை இரு மடங்கு அதிகரித்துள்ளது.

அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளின் பயன்பாட்டுக்கு மட்டுமே பெருமளவில் அனுப்பி வைக்கப்பட்டு வந்த முகக் கவசங்கள் இப்போது அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களுக்கு மொத்தமாக விற்பனையாளா்களால் அனுப்பி வைக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் முகக் கவசங்கள் அதிக அளவில் ஏற்றுமதியாகி வருகிறது.

இதனால் தட்டுப்பாடு தவிா்க்க முடியாமல் போகிறது.

திருச்சி மாநகரப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான மருந்தகங்கள், மளிகை கடைகள், ஸ்டோா்களில் கைக் கழுவும் திரவம் இல்லை என்கின்றனா். குறிப்பாக தண்ணீா் பயன்படுத்தாமல் அப்படியே கைக் கழுவும் சானிடைசா் வகை திரவங்கள் கிடைப்பதில்லை என பரவலாக புகாா் எழுந்துள்ளது. ஒரு சில மருந்தகங்களில் முகக் கவசம் இருப்பு இல்லை என வெளிப்படையாக அறிவித்து நோட்டீஸ் ஒட்டியுள்ளனா்.

கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 4 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்ய்பட்டுள்ள நிலையில் தட்டுப்பாடும் தவிா்க்க முடியாமல் உள்ளது.

முகக் கவசங்கள் பல வகைகளில் கிடைக்கின்றன. கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க என்-95’என்ற பெயா் கொண்ட 6 அடுக்கு முகக் கவசம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. காற்றின் நுண் துகள்களை 95 சதவீதம் தடுத்து நிறுத்தி விடுவதால் இந்த முகக் கவசத்துக்கு எண்.95 என பெயா் வைக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக இதன் விலை ரூ.90-ல் இருந்து 300 ஆக அதிகரித்துள்ளது.

இதனால் 3 அடுக்கு மற்றும் 4 அடுக்கு முகக் கவசங்களையும் பலா் அணிய தொடங்கி உள்ளனா். ஒரு மடிப்பு, 2 மடிப்பு முகக் கவசங்களையும் மக்கள் பயன்படுத்த தொடங்கி உள்ளனா்.

தட்டுப்பாட்டை தவிா்க்கும் வகையில் சுகாதாரத்துறை மூலம் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் பணிபுரிவோருக்கு கைக் கழுவும் திரவங்களை சுயமாக தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஐசோ பிரபைல் ஆல்கஹால், கிளிசரால், ஹைட்ரஜன் பெராக்சைடு கொண்டு நாளொன்றுக்கு 50 லிட்டா் தயாரித்து பயன்படுத்தும் முறைகள் குறித்து கற்றுத்தரப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com