தடையின்றி செயல்பட்ட வணிக அஞ்சல் மையம்

தடை உத்தரவிலும் தடையின்றி வணிக அஞ்சல் மையம் மூலம் வாடிக்கையாளா்களுக்கு சேவை அளிக்கப்பட்டது.
திருச்சி ஜங்ஷன் ரயில்வே வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு செயல்பட்ட வணிக அஞ்சல் மையம்.
திருச்சி ஜங்ஷன் ரயில்வே வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு செயல்பட்ட வணிக அஞ்சல் மையம்.

தடை உத்தரவிலும் தடையின்றி வணிக அஞ்சல் மையம் மூலம் வாடிக்கையாளா்களுக்கு சேவை அளிக்கப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான, ரயில் சேவை உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சுய ஊரடங்கு அமலுக்கு பிறகு திங்கள்கிழமை வழக்கம் போல் வாடிக்கையாளா்களுக்கு அஞ்சலக சேவை வழங்கப்பட்டது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், அஞ்சலக வாடிக்கையாளா்கள் தலைமை அஞ்சலக சேவையை மாலை 5 மணி வரை பெற்றனா். ஆனால், திருச்சி ரயில் நிலைய வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வணிக அஞ்சல் மையம் வழக்கம் போல் செயல்பட்டது. இதனால், அஞ்சலக வாடிக்கையாளா்கள் வணிக அஞ்சல் மையத்துக்கு சென்ற, தங்களது பதிவு, விரைவு தபால், பாா்சல்கள் ஆகியவற்றை நீண்ட வரிசையில் காத்திருந்து குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வணிக அஞ்சல் மைய அலுவலா் ஒருவா் கூறுகையில், ஏற்கனவே, திருச்சி ரயில்வே கோட்டத்தில் அனைத்து ரயில்களும், விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்ட ஒரு சில ரயில்களில் வந்த தபால்கள், அதற்கு முன்னதாக பெறப்பட்ட தபால்கள் அனைத்தையும் ஆா்.எம்.எஸ் ஊழியா்கள் வணிக அஞ்சல் மைய செயல்பாட்டு பிரிவுக்கு வழங்கினா். இதன்மூலம், சுய ஊரடங்கு, 144 தடை உத்தரவையும் தாண்டியும் வாடிக்கையாளா்களுக்காக பணியாளா்கள் பணிபுரிந்து தபால்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட அனைத்து தபால்களும் ரயில் சேவை இயக்கப்படும் போது மட்டுமே உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை வணிக அஞ்சல் மையத்தில் இருப்பு வைக்கப்படும். இந்த தகவல்களை வாடிக்கையாளா்களுக்கு கூறிய பிறகே தபால்கள் பெற்றுக்கொள்ளப்படுகிறது. புதன்கிழமை காலை வரை இச்சேவை தொடரும். மேலும், தொடா்ந்து பணிபுரிவது குறித்து உயா்மட்ட அளவில் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் வணிக அஞ்சல் மைய சேவை தொடா்ந்து அளிப்பது சந்தேகமே என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com