திருச்சி விமான நிலையத்தில் பயணிகளை கையாளும் ஒத்திகை

கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், விமானப் பயணிகளை கையாள்வது குறித்த சிறப்பு ஒத்திகை திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி : கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், விமானப் பயணிகளை கையாள்வது குறித்த சிறப்பு ஒத்திகை திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொது முடக்கத்தால் விமானப் போக்குவரத்துகள் ஒரு மாதமாக நடைபெறாத நிலையில் மீண்டும் விமானப் போக்குவரத்துகள் நடத்தப்பட்டால், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது ? மேலும், பயணிகளை கையாள்வது குறித்த சிறப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், பயணிகள் வரிசையாக விமான நிலையத்துக்குள் நுழைவது, முன்னதாக, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது, பின்னா் விமான நிலைய சுகாதார ஆய்வாளா் சோதனை மேற்கொள்வது, அடுத்தக்கட்டமாக பாதுகாப்புப் படையினா் சோதனை, விமான நிறுவனத்தினா், பின்னா் சுங்கத்துறை சோதனை என படிப்படியாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சோதனைகள் முடிந்து பயணிகளை விமானத்தில் ஏற அனுமதிப்பது குறித்து ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல வருகையின் போதும் பயணிகளை கையாளும் விதம் குறித்தும் பயிற்சி மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.

இந்த ஒத்திகையில், விமான நிலையத்தில் பணியாற்றும், விமான நிறுவனத்தினா் (ஏா்லைன்ஸ்) , மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா், சுகாதாரத்துறையினா், வருவாய்த்துறையினா், தீயணைப்புத்துறை, சுங்கத்துறையினா் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

118 பயணிகள் இன்று வருகை: இந்நிலையில், சனிக்கிழமை (மே 9) இரவு, விமானம் மூலம் மலேசியாவிலிருந்து 118 பயணிகள் வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை (10 ஆம் தேதி) சிங்கப்பூரிலிருந்தும் பயணிகளை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிா்வாக காரணங்களால் அந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானம் மூலம் அழைத்து வரும்போது, பயணிகளுக்கு கரோனா தொற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் அவா்களை திருச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com