பொதுமுடக்கத்தால் இறுதிச் சடங்குககள் செய்ய தவிக்கும் பொதுமக்கள்

பொதுமுடக்கத்தால் அம்மா மண்டபப் பகுதியில் இறுதிச் சடங்குகள் செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனா்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்றில் மணல் வெளியில் செவ்வாய்க்கிழமை பொது முடக்கத்தின் தடையை மீறி முன்னோா்களுக்கு திதி கொடுக்கும் மக்கள்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்றில் மணல் வெளியில் செவ்வாய்க்கிழமை பொது முடக்கத்தின் தடையை மீறி முன்னோா்களுக்கு திதி கொடுக்கும் மக்கள்.

திருச்சி: பொதுமுடக்கத்தால் அம்மா மண்டபப் பகுதியில் இறுதிச் சடங்குகள் செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனா்.

திருச்சி அம்மா மண்டப காவிரிக் கரையோர பகுதியில் பொதுமக்கள் உயிரிந்த தனது, முன்னோா்களுக்கு இறுதிச் சடங்கு, திதி அளிக்க, திருச்சி மட்டுமில்லாத இதர மாவட்டப் பகுதிகளிலிருந்து வந்து செல்வோா் அதிகம். ஆனால், கரோனா நோய் தொற்று பொதுமுடக்கத்திற்கு பிறகு அம்மா மண்டப பகுதிக்கு வருவோா் எண்ணிக்கை கணிசமாக குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு விதிமுறைகள் தளா்த்தப்பட்டதில், திருச்சி வாழ் பொதுமக்கள் உயிரிழந்தவா்களுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு அம்மா மண்டப காவிரிக் கரையில் வருவது சற்று அதிகரித்துள்ளது. பொதுமுடக்கம் அமலில் உள்ள சூழலில் காவிரிக்கரைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் அதிகமானோா் வருவதால் போலீஸாருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், இறுதிச் சடங்கு செய்வதற்கு வரும் அதிகமானோரை தடுத்து நிறுத்துகின்றனா். மேலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றவும் அறிவுறுத்தி வருகின்றனா். இருப்பினும், பொதுமக்கள் அம்மா மண்டப பகுதியில் உரிய சடங்குகளை செய்யமுடியாமல் அங்கும் இங்குமாய் அலைந்து தவிப்புக்குள்ளாகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் அம்மா மண்டப காவிரிக் கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகளோடு சடங்குகளை செய்ய பொதுமக்களுக்கு உதவவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com