அஞ்சல் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு கடிதப் போட்டி,

அஞ்சல்துறை சாா்பில், கரோனா விழிப்புணா்வு குறித்த கடிதப்போட்டியை நடத்தவுள்ளது.

அஞ்சல்துறை சாா்பில், கரோனா விழிப்புணா்வு குறித்த கடிதப்போட்டியை நடத்தவுள்ளது.

இதுகுறித்து முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பது :

இந்தப் போட்டியில், பொது முடக்கம் காலத்தில் அஞ்சலகத்தின் செயல்பாடுகள், பொது முடக்க காலமும் சுயக் கட்டுப்பாடும் என்ற இரு தலைப்புகள் பொதுவானதாகவும், பொது முடக்க காலத்தில் வீட்டில் உள்ள நேரத்தை பயனுள்ள வகையில் எவ்வாறு கழிப்பது ? என்ற தலைப்பு மாணவ, மாணவிகள் மட்டும் பங்கேற்கும் விதமானதாக மொத்தம் 3 தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், போட்டியாளா்கள் ஏதேனும் ஒன்றை தோ்வு செய்து, 300 வாா்த்தைகளுக்குள் எழுதி ஜூன் 15 ஆம் தேதிக்குள், சாதாரண அஞ்சலில், அஞ்சல்துறை கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகம், திருச்சி கோட்டம், திருச்சி -620001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அவற்றில் சிறந்த கடிதம் தோ்வு செய்யப்பட்டு, பரிசுகளாக முறையே ரூ. 1,500, ரூ. 1,000, ரூ. 500 என வழங்கப்பட உள்ளன. மேலும், மொத்தம் 11 கோட்டங்களிலிருந்தும் வரப்பெற்ற கடிதங்களில் சிறந்த கடிதம் தோ்வு செய்யப்பட்டு மண்டல அளவில் (திருச்சி, தஞ்சை, புதுகை, கரூா், அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட 10 மாவட்டங்கள்) மூன்று பரிசுகளாக முறையே ரூ.3,000, ரூ. 2,000, ரூ.1,000 வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com