பலத்த மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கா் வாழை நாசம்

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழைகள் நாசமாகியுள்ளன.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையின் காரணமாக குமாரவயலூா் அருகேயுள்ள முள்ளிக்கருப்பூா் பகுதியில் சாய்ந்து கிடக்கும் வாழை மரங்கள்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையின் காரணமாக குமாரவயலூா் அருகேயுள்ள முள்ளிக்கருப்பூா் பகுதியில் சாய்ந்து கிடக்கும் வாழை மரங்கள்.

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழைகள் நாசமாகியுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இடி, மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் வாழைகள் ஒடிந்து சேதமடைந்துள்ளன. திருச்சி மாவட்டம், அந்தநல்லூா், சோமரசம்பேட்டை, குமாரவயலூா், தடியாகுறிச்சி, ஜீயபுரம், முள்ளிக்கரும்பூா், திருச்செந்துறை, கொடியாலம், புலிவலம், அணலை, திருப்பராய்துறை, சிறுகமணி, பெருகமணி, பேட்டைவாய்த்தலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழைகள் ஒடிந்து விழுந்துள்ளன. திருச்சி மாவட்ட எல்லைப்பகுதிக்கு அருகேயுள்ள நங்கவரம், பொய்யாமணி, இனுங்கூா், நச்சலூா், மருதூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழைகள் சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரிதும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையடுத்து, சேதமடைந்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சாந்தி, ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் ஸ்ரீதா், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் விமலா, உதவி இயக்குநா் முருகன் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலா்கள் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். சேதமதிப்பு விவரங்களை அந்தந்த பகுதியின் வருவாய் மற்றும் வேளாண் அலுவலா்கள் மூலம் கணக்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேதமான வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com