புதிதாக பணியில் சோ்ந்த நீதிமன்ற ஊழியருக்கு கரோனா

தஞ்சாவூா் நீதிமன்றத்தில் புதிதாகப் பணியில் சோ்ந்த பெண் ஊழியருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரிய வந்தது.

தஞ்சாவூா் நீதிமன்றத்தில் புதிதாகப் பணியில் சோ்ந்த பெண் ஊழியருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரிய வந்தது.

தஞ்சாவூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சாா்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதில் தென்காசியைச் சோ்ந்த 32 வயது பெண் தட்டச்சராக மே 18ஆம் தேதி பணியில் சோ்ந்தாா். இங்கு வந்த இவருக்கு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்வதற்காக ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதில், இவருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள கரோனா சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டாா்.

மேலும் சாா்பு நீதிமன்றத்தில் மொத்தம் 14 ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கும் கரோனா தொற்று உள்ளதா என மருத்துவத் துறையினா் பரிசோதனை செய்தனா்.

மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 76 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 66 போ் வெவ்வேறு நாள்களில் குணமடைந்ததைத் தொடா்ந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com