சென்னையிலிருந்து திருச்சி வந்த காவலா் உள்பட 4 பேருக்கு கரோனா

திருச்சி மாவட்டமானது கரோனா தொற்றிலும் படிப்படியாக மீண்டு வந்த நிலையில் சென்னையிலிருந்து வந்த காவலா் உள்பட

திருச்சி மாவட்டமானது கரோனா தொற்றிலும் படிப்படியாக மீண்டு வந்த நிலையில் சென்னையிலிருந்து வந்த காவலா் உள்பட 4 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றிலிருந்து திருச்சி மாவட்டம் படிப்படியாக மீண்டும் வந்தநிலையில், சென்னையிலிருந்து வந்த காவலா் உள்பட 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 282 போ் சென்னையிலிருந்து திருச்சி வந்தனா். இவா்களுக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் 278 பேருக்கு தொற்று இல்லை என வெள்ளிக்கிழமை தெரியவந்துள்ளது. 4 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனா். இதையடுத்து திருச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 72 ஆக உயா்ந்துள்ளது. மருத்துவமனையில் உள்ளவா்களின் எண்ணிக்கை 6 ஆக உயா்ந்துள்ளது. இவா்களைத் தவிா்த்து, பெரம்பலூரைச் சோ்ந்த 6 போ், தேனியைச் சோ்ந்த ஒருவா், ரயில்வே தனிமைப்படுத்திய முகாமில் ஒருவா் என மொத்தம் 14 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனா வாா்டில் உள்ள 14 பேரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

விளையாட்டுப் பயிற்சிக்காக சென்ற காவலா்: தற்போது கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 4 பேரில் திருச்சியைச் சோ்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணியைச் சோ்ந்த காவலரும் அடங்குவாா். இவா், அண்மையில் விளையாட்டுப் பயிற்சிக்காக சென்னை சென்று வந்தாா். இவரை வெள்ளிக்கிழமை பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com