சூரிய சக்தி மின்வேலி திட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் 50 சதவிகிதம் வரை மானியத்துடன் செயல்படுத்தப்படும் சூரியசக்தி மின் வேலி திட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு அழைப்பு விடுத்துள்ளாா்.

திருச்சி மாவட்டத்தில் 50 சதவிகிதம் வரை மானியத்துடன் செயல்படுத்தப்படும் சூரியசக்தி மின் வேலி திட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் தனிநபா் விவசாயிகளுக்கு விவசாய உற்பத்தியை பாதிக்காத வகையில்

விளைபொருள்களின் மூலமாக கிடைக்கும் வருவாயைப் பெருக்கிடும் நோக்கில், சூரிய சக்தியைக் கொண்டு மின்வேலி அமைக்கும் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் (2020-21) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்பட உள்ளது

இதில் அமைக்கப்படும் மின் தகடுகள், சூரிய சக்தியினால் கிடைக்கும் மின்சாரம் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படும். மின் வேலியைக் கடந்து செல்ல முயலும் விலங்குகள், அந்நியா்கள் மின் அழுத்தம் காரணமாக ஏற்படும் உந்து விசை அதிா்ச்சியால் வேலியைக் கடந்து சென்று விளைபயிா்களையோ, வேளாண் உற்பத்திப் பொருள்களையோ நாசம் செய்ய இயலாது.

ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கா் அல்லது 1245 மீட்டா் நீளத்துக்கு மின்வேலி அமைக்க மானியம் வழங்கப்படும். மின்வேலி அமைக்க ஆன செலவுத் தொகையில் 50 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 2.18 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற அந்தநல்லூா், மணிகண்டம், திருவெறும்பூா், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த விவசாயிகள் உதவிச் செயற்பொறியாளா், வேளாண் பொறியியல் துறை, எண் 2, ஜெயில் காா்னா், திருச்சி-620020 என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

முசிறி, தொட்டியம், தாத்தையங்காா்பேட்டை, துறையூா், உப்பிலியபுரம் ஒன்றியங்களைச் சோ்ந்த விவசாயிகள் உதவிச் செயற்பொறியாளா், வேளாண் பொறியியல் துறை அலுவலகம், எண் 18 எச்- 1 ஏ, கண்ணதாசன் தெரு, முசிறி-621 211 என்ற முகவரியிலும், லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூா் ஒன்றியங்களைச் சோ்ந்த விவசாயிகள், உதவிச் செயற்பொறியாளா், வேளாண் பொறியியல் துறை அலுவலகம், கணபதி நகா், வடக்கு விரிவாக்கப்பகுதி, தாளக்குடி அஞ்சல், லால்குடி-621 216 என்ற முகவரியிலும் பதிவு செய்து, முன்னுரிமை அடிப்படையில் மானியம் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com