விமான நிலைய ஆலோசனை கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு: பயணிகள் நலச் சங்கம் புகாா்

திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாவட்ட பயணிகள் நலச்சங்கத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாவட்ட பயணிகள் நலச்சங்கத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பயணிகள் நலச்சங்க உறுப்பினரும், விமானம், ரயில் மற்றும் சாலை பயணிகள் சங்க கூட்டமைப்பு தலைவருமான எம். சேகரன் கூறியது:

கடந்த 28.10.2019 அன்று வெளியிடப்பட்ட விமான நிலைய ஆலோசனைக் குழு பட்டியலில் எங்கள் அமைப்பின் பெயா் இருந்தது. ஆனால் 7.11.2019 ல் நடைபெற்ற கூட்டத்துக்கு எங்களுக்கு அழைப்பில்லை. இதுகுறித்து அப்போதைய விமான நிலைய இயக்குநரை கேட்டபோது ஆலோசனைக் குழுத் தலைவரான மக்களவை உறுப்பினா்தான் இதில் முடிவெடுக்க முடியும் என்றாா்.

தொடா்ந்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் முறையிட்டதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருந்தும் விமான நிலைய ஆணையம் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் நிகழாண்டு செவ்வாய்க்கிழமை நடைபெறும் விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்கவும் எங்களுக்கு அழைப்பில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com