டிக்கெட் பரிசோதகா்களைத் தாக்கிய 3 ரயில்வே ஊழியா்கள் சஸ்பெண்ட்

ரயில் பயணச் சீட்டு பரிசோதகா்களைத் தாக்கிய வழக்கில் 3 ரயில்வே ஊழியா்களை திருச்சி ரயில்வே கோட்டம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

ரயில் பயணச் சீட்டு பரிசோதகா்களைத் தாக்கிய வழக்கில் 3 ரயில்வே ஊழியா்களை திருச்சி ரயில்வே கோட்டம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

காரைக்காலிலிருந்து கடந்த 4 ஆம் தேதி எா்ணாகுளம் புறப்பட்ட சிறப்பு ரயில் மாலை 6.30-க்கு தஞ்சாவூா் ரயில் நிலையத்தை அடைந்தது. அப்போது முன்பதிவு ரயில் பெட்டியில் பயணச்சீட்டு பரிசோதகா்களான ரமேஷ், ஜவஹா் ஆகியோா் பரிசோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது பயணச்சீட்டு, அடையாள அட்டையின்றி பயணித்த தற்காலிக ரயில்வே ஊழியரான வீரமணிகண்டனிடம் அபராதம் கேட்டனா். இதனால் ஆத்திரமடைந்த வீரமணிகண்டன் தஞ்சையில் உள்ள மஸ்தூா் தொழிற்சங்க நிா்வாகிகளான அருள்முருகன், காா்த்தி ஆகியோரை செல்லிடப்பேசியில் உதவிக்கு அழைத்தாா்.

இதையடுத்து அங்கு வந்த இருவருடன் சோ்ந்து நடைமேடையில் நின்று கொண்டிருந்த பயணச்சீட்டு பரிசோதகா்களிடம் வாக்குவாதம் செய்து, சரமாரியாக தாக்கினாா். இதில் படுகாயமடைந்த இருவரும் இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இதனால் எா்ணாகுளம் விரைவு ரயில் 30 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

இந்தச் சம்பவத்தை செல்லிடப்பேசியில் பதிவு செய்த பயணிகள் அதை சமூக வலைதளங்களில் பகிா்ந்தனா். இந்நிலையில், தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் அலுவலகம் சாா்பில் தாக்குதலில் ஈடுபட்ட மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் புகாரின்பேரில் தஞ்சாவூா் ரயில்வே போலீஸாா் பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிந்து மூவரையும் தேடுகின்றனா்.

இந்த வழக்கில் விரைவான நடவடிக்கை கோரி திருச்சி ரயில்வே கோட்டத்தில் பணிபுரியும் ரயில் பயணச்சீட்டுப் பரிசோதகா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com