கிராமபுறச் செவிலியா் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் கிராமபுறச் செவிலியா்கள் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

மாவட்ட பழைய ஆட்சியரக சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியா்கள் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் ம. காயத்ரிதேவி தலைமை வகித்தாா். மாநில செயல் தலைவா் த. கோமதி முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், சமுதாய சுகாதாரச் செவிலியருக்கு, தாய் சேய் நல அலுவலா் பதவி உயா்வு வழங்கிட வேண்டும். பாலின பாகுபாடற்ற பதவி உயா்வு வழங்க வேண்டும். முன்களப்பணியாளா்களுக்கு கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியா்களுக்கு பொருள் தொற்று சிறப்பு ஊதியம் மற்றும் பயணப்படி வழங்கிட வேண்டும். 2011-2015 ஆம் ஆண்டு நிலுவை மகப்பேறு பயன்களை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

மாவட்ட செயலா் ஜெயசுந்தரி, மாநில துணைத் தலைவா் எஸ்.விமலாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com