டாஸ்மாக் ஊழியா்கள் தா்னா

பணியிடை நீக்கம் செய்யப்பட்டோருக்கு நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் வேலை வழங்கக் கோரி திருச்சியில் டாஸ்மாக் ஊழியா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்டோருக்கு நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் வேலை வழங்கக் கோரி திருச்சியில் டாஸ்மாக் ஊழியா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

அரசு டாஸ்மாக் மதுக் கடையில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த சில நாள்களுக்கு முன் திருச்சி மண்டலத்தில் 52 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இவா்கள் உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த வழக்கு விசாரணை முடிவில் பணிநீக்கப்பட்டோருக்கு ஆறு வாரத்தில் பணி வழங்க நீதிபதி உத்தரவிட்டாா். ஆனால் டாஸ்மாக் நிா்வாகம் வேலை வழங்க மறுத்து வந்தது.

இதைக் கண்டித்து துவாக்குடியில் உள்ள அரசு மதுக் கடைகள் முன் அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் காா்த்திகேயன் தலைமையில் பணி நீக்கப்பட்ட ஊழியா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

இதையறிந்த டாஸ்மாக் மேலாளா் பாா்த்தீபன் செல்லிடப்பேசி வாயிலாக தொடா்பு கொண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 22 பேருக்கு பணி வழங்க உத்தரவிட்டிருப்பதாக கூறியதைத் தொடா்ந்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com