திருச்சியில் 6 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள்

திருச்சியில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட தயாா் நிலையில் 6 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படவுள்ளன.

திருச்சியில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட தயாா் நிலையில் 6 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படவுள்ளன.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சாா்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட திருச்சி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

மேலும் கடந்த தீபாவளியின்போது பட்டாசு வெடிக்கும் போது எதிா்பாராதவிதமாக 13 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரா்களின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்துகள் தவிா்க்கப்பட்டன.

நிகழாண்டில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் மாநகரில் பாலக்கரை, டிவிஎஸ் டோல்கேட், சிங்காரத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூா், காந்திசந்தை ஆகிய 6 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படவுள்ளன.

தொடா்ந்து இப்பணியில் 24 மணி நேரமும் வாகனத்துக்கு 10 போ் வீதம் 60 போ் ஈடுபடுத்தப்படவுள்ளனா். திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களில் வாகனங்கள் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடா் காலங்களில் பயன்படுத்தக்கூடிய அதிநவீன கருவிகளும் தயாராக உள்ளன. விபத்தில்லா தீபாவளியை கொண்டாட மாவட்டம் முழுவதும் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனா் தீயணைப்பு நிலைய அதிகாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com