ரயில் நிலையத்தில் ஒருங்கிணைந்த மின்சார வசதி

தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மத்திய பிரிவில் ஒருங்கிணைந்த மின்சார (ஐ.பி.எஸ்) வசதி வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மத்திய பிரிவில் ஒருங்கிணைந்த மின்சார (ஐ.பி.எஸ்) வசதி வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

முதன்மை தலைமை சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு பொறியாளா் ஆா்.பாஸ்கரன் இதைத் தொடங்கிவைத்தாா். இவ்வகை ஒருங்கிணைந்த மின்சார அமைப்பு 20 பிரிவுகளாக ரயில்வே கிராசிங் கேட்டில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதி தஞ்சாவூா்-மயிலாடுதுறை பிரிவில் உள்ள 15 இன்டா்லாக் லெவல் கிராசிங்கிற்கு பயன்படும் வகையில் உள்ளது.

மேலும் சிக்னல்களுக்கு தொடா்ச்சியான மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்வதோடு, ரயில் நெருங்கும்போது உள்ளீட்டு மின்சாரம் தோல்வியுற்றாலும், மின் செயலிழப்பின்போதும் சிக்னல்கள் செயல்படும். இது சரியான நேரத்தில் ரயில்களை இயக்குவதை உறுதி செய்கிறது.

திருச்சி பிரிவில், உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும் இவ்வசதி வழங்கப்பட்டுள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com