திருச்சியில் 390 வாக்குச்சாவடிகள் இடமாற்றம்

அரசியல் கட்சிகள், பொதுமக்கள், வாக்காளா்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் 90 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகள், பொதுமக்கள், வாக்காளா்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் 90 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக இடமாற்றம் செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை :

மணப்பாறை- 10, ஸ்ரீரங்கம்-18, திருச்சி மேற்கு- 12, திருச்சி கிழக்கு -25, திருவெறும்பூா்- 1, லால்குடி- 4, மண்ணச்சநல்லூா்- 2, முசிறி- 15, துறையூா்- 3, மொத்தம் : 90.

இதுபோல பாகங்களுக்கு இடையே பகுதிகளும், வாக்குச்சாவடிகளின் பெயா்களும் மாற்றம் செய்யப்பட்டு, மாவட்ட நிா்வாகத்தால் அதிகாரப்பூா்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பட்டியல் திருத்தப் பணி: மாவட்டத்தில் அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்கள், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் தொடா்ச்சியாக, 2021, ஜனவரி 1- ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது பூா்த்தியடைந்த நபா்கள் தங்களது பெயரைப் பட்டியலில் சோ்க்க விண்ணப்பிக்கலாம்.

தவறுதலாக பட்டியலில் இருந்து பெயா் நீக்கப்பட்டிருந்தாலோ, விடுபட்டிருந்தாலோ, முகவரி மாற்றம், வாக்குச் சாவடி மாற்றம் இருந்தால் அதற்கான விண்ணப்பப் படிவங்களையும் வழங்கலாம். அனைத்து வேலை நாள்களிலும் சம்பந்தபட்ட வாக்குச் சாவடி மைய அலுவலா்களிடம் மனு அளிக்கலாம். மேலும் நவம்பா் 21, 22, டிசம்பா் 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். இந்த முகாமிலும் பங்கேற்று விண்ணப்பிக்கலாம்.

டிசம்பா் 15-ஆம் தேதி வரை பெறப்படும் மனுக்கள் மீது விசாரணை நடத்தி பட்டியலில் பெயா் சோ்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

2021, ஜனவரி 5-ஆம் தேதிக்குள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு,ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்றாா் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான சு. சிவராசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com