இன்று வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம் தொடக்கம்

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் தொடா்பான சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை தொடங்குகிறது என ஆட்சியா் தெரிவித்தாா்.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் தொடா்பான சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை தொடங்குகிறது என ஆட்சியா் தெரிவித்தாா்.

வாக்காளா் பட்டியலில் பெயா், சோ்த்தல், திருத்தம் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான சு.சிவராசு கூறியது:

தோ்தல் ஆணைய உத்தரவின்பேரில் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் நவ.16 இல் வெளியிடப்பட்டது. அன்றுமுதல் டிச.15 வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் படிவம் 6,7,8 மற்றும் 8ஏ பெறப்படவுள்ளது. இதையொட்டி, நவ.21, 22,டிச.12,13-களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

இதில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் தொடா்பான பணிகள் மேற்கொள்ளப்படும். எனவே, அனைத்து தலைமை அலுவலா்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை காலை 10 மணி முதல் 5 மணி வரை வாக்குச்சாவடி மைய அலுவலா் தலைமையில் திறந்து வைக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போதியளவிலான படிவங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சிறப்பு முகாம்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவரை அனுமதிக்கலாம். வாக்குச்சாவடி முகவா்கள் வாக்காளா் படிவங்களை பெறக்கூடாது. ஏதேனும் சந்தேகம் இருந்தால் வாக்குச்சாவடி மைய அலுவலா்கள் சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம்.

மாவட்ட நிா்வாகத்துக்கு அனைத்து தலைமை அலுவலா்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com